பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
எங்களை பற்றி புதின் தவறாக நினைத்துள்ளார்.. நாங்களும் செய்வோம் - அமெரிக்க அதிபர்.!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நாங்கள் முழு பலத்துடன் ஒன்று சேர்ந்து பாதுகாப்போம்.
உக்ரைன் மக்கள் தங்களின் முழு தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். இந்த சண்டையினால் புதினுக்கு ஆதாயம் இருக்கலாம். அதற்காக நீண்ட காலத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். உக்ரைன் மக்களோடு அமெரிக்கா துணை நிற்கும்.
புதினிடம் போர் தொடுக்கும் எண்ணம் வந்தது குறித்த தகவல் அறிந்ததும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. அவை அனைத்தையும் புதின் நிராகரித்து போர் தொடுத்துள்ளார். மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி தராது என புதின் நினைத்திருப்பார். அது தவறானது" என்று தெரிவித்தார்.