#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிலாவில் மோதவுள்ள அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்..!
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். கடந்த 2015 ஆம் வருடம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில், பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் தனது பணியை நிறைவு செய்துவிட்டு, பூமிக்கு திரும்பி வரும் போது எரிபொருள் தீர்ந்துபோனது.
இதனால் ராக்கெட் விண்வெளியிலேயே கைவிடப்பட்ட நிலையில், பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் நிலவில் மோத வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 4 ஆம் தேதி நிலவின் மீது மோதி வெடித்து சிதறும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக பேராசிரியர் மெக்டொவல் தெரிவிக்கையில், பல சகாப்தத்தில் 50 பெரிய விண்வெளி பொருட்கள் கண்காணிக்க இயலாமல் போயுள்ளது. பால்கன் ராக்கெட் நிலவில் மோத இருப்பதை உறுதி செய்துள்ளது இதுவே முதல் சம்பவமாகும்.
ராக்கெட் நிலவின் மேற்பரப்பில் மோதினால் சிறிய பள்ளம் ஏற்படும். வரும் மார்ச் 4 ஆம் தேதி பூமியில் இருந்து பார்க்க முடியாத நிலாவின் அரைக்கோள பக்கத்தில் பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் மோதும்" என்று தெரிவித்தார்.