பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"நல்ல கணவன் வேணும்" கையில் போர்டுடன், கடைத்தெருவுக்கு வந்த பெண்..! அதிசயிக்கும் மக்கள்.!
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் வசித்து வரும் கரோலினா கீட்ஸ் (29) ஒரு பிரபல மாடல் ஆவார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோலினா தனக்கு ஒரு துணையை தேடி வருகின்றார். நிறைய டேட்டிங் செயலிகளை முயற்சித்துப் பார்த்தும் அவருக்கு ஏற்ற துணை கிடைக்கவில்லையாம்.
எனவே கரோலினா தற்போது தெருவில் இறங்கி அதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். அன்றாடம் சாலைக்கு வரும் அவர் கையில் எனக்கு தேவையான கணவனை தேடி வருகிறேன் என்ற பதாகையை ஏந்தியபடி பிரதான சாலைகளில் நின்று கொள்கிறார். கரோலினாவின் இந்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அத்துடன் அது வரவேற்பையும் பெற்று வருகிறது.
பதாகையை பார்த்த ஒருவருடன் கரோலினா தனது செல்போன் என்னை பரிமாறிக் கொண்டு அவருடன் பேசி வருவதாக தெரிவித்தார். ஆனால் சில நாட்களுக்கு பின் மீண்டும் அவர் தனக்கு ஏற்றவர் அல்ல என்று கூறிக்கொண்டு சாலைக்கு வந்துவிட்டார். இப்படி பதாகையுடன் சாலையில் நிற்பதால் ஒரு நல்ல கணவர் கிடைப்பார் என்று அவர் முயற்சித்து வருகிறாராம்.
தனது நம்பிக்கையை எந்த காரணத்தை கொண்டும் கைவிடப் போவதில்லை என்று கரோலினா தீவிரமாக தெரிவித்துள்ளார். திருமணம் ஆக வேண்டும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நம்மூர் பெண்கள் கோவில், குளம் என்று சுற்றிவரும் நிலையில் மாடல் அழகி கரோலினா தெருவில் இறங்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.