#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹேர் டிரையர் உபயோகித்த பெண்மணி: தீ அலாரம் அடித்ததால் ரூ.70 ஆயிரம் அபராதம்.!
ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் பகுதியைச் சார்ந்த பெண்மணி அங்குள்ள நோவோடெல் பெர்த் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது தனது தலை முடியை அலங்காரம் செய்வதற்காக ஹேர் டிரையர் உபயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அறையின் வெப்பமானது அதிகரித்து தீயணைப்பு கருவிகள் செயல்பட்டு, தீ ஏற்பட்டதாக அலாரம் அடித்துள்ளது. இதனை அடுத்து விடுதி நிர்வாகத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு பெண்மணி ஹேர் டிரையர் உபயோகம் செய்து தலைமுடியை அலங்காரம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக விடுதி நிர்வாகம் பெண்ணுக்கு ரூ.78,000 அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் செய்திகளாக வெளியாகி ஊடகங்கள் விமர்சனத்தை வைக்கவே, விடுதியின் மேலாளர் பெண்ணுக்கு அபராதமாக விதித்த தொகையை மீண்டும் செலுத்தியிருக்கிறார்.