#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாடகை தகராறில் அமைதியை நிலைநாட்டச்சென்ற கல்லூரி மாணவர் நெஞ்சில் குத்திக்கொலை..!
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்னில் செயல்பட்டு வரும் கல்லூரியில் எம்.டெக் பயின்று வரும் இந்திய மாணவர் நவஜீத் சந்து (22). இவர் அங்கு எழுந்த வாடகை தகராறில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த இந்திய மாணவர்களை தடுக்கும் முயற்சியில் இறங்கியபோது, அவரின் மீது நடந்த தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சொத்தை விற்று படித்த மாணவருக்கு நேர்ந்த சோகம்:
நவஜீத் சிந்துவின் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் அவரின் உயிர் பரிதாபமாக பறிபோனது. வரும் ஜூலை மாதம் தாயகம் திருப்பவிருந்த சந்து, தற்போது சடலமாக வீட்டிற்கு திரும்புகிறார். தன்னிடம் இருந்த நிலத்தை விற்பனை செய்து சித்து படிக்க சென்றுள்ளார்.
2 இந்தியர்களுக்கு விக்டோரியா காவல்துறை வலைவீச்சு:
ஆஸ்திரேலிய காவல்துறையினர் நவஜீத் சந்துவை கொலை செய்ததாக அபிஜித் (26), ராபின் (27) ஆகிய இருவரை தேடி வருகின்றனர். சகோதரர்களான இவர்கள் கொலையை செய்துவிட்டு காரில் தப்பி சென்றுள்ளனர். மேற்கூறிய சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு மாணவர் சிகிச்சையில் உள்ளார்.