#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigBreaking: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார்..!
கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார் என அறிவிப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ஷேன் வார்னே திடீர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது 52 வயதாகும் நிலையில், மாரடைப்பின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இது கிரிக்கெட் உலக ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் உள்ள தனக்கு சொந்தமான குடியிருப்பில் ஷேன் வார்னே இருந்தபோது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஷேன் வார்னே-வின் மறைவுக்கு உலகளவில் இரங்கல் செய்திகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஷேன் வார்னே கடந்த 2008 - 2011 ஆம் வருடம் வரை ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும், கோச்சாகவும் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2008 ஆம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இவர் தலைமையிலான அணியே தோற்கடித்து வெற்றிக்கோப்பையை தட்டி சென்றது.