பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பலே திருடர்கள்...ஒரு நிமிடத்தில் 7 கோடி மதிப்பில்லான சொகுசு கார்கள் அபேஸ்..!
இங்கிலாந்தில் ஒரே நிமிடத்தில் 7 கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் திருட்டு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் தென் கிழக்கு மாகாணமான எஸ்செக்ஸில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து சொகுசு கார்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் கொள்ளையர்கள் பல்பன் தொழிற் பூங்காவில் நுழைந்து அங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களான மெர்சிடெஸ் பென்ஸ், போர்ஸ், ஏரியல் ஆட்டம் உள்ளிட்ட கார்களை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் நவம்பர் 11ஆம் தேதி நடந்த இந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட ஐந்து கார்களில் ஒரு கார் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.