அடேங்கப்பா ஒரு புறாவின் விலை 9 கோடியா; அட இதனாலதா இவ்ளோ தொகையா!



belgium---armando---bird--971-crores-yelam

ஒரு புறா கோடிக்கணக்கில் ஏலம் போகியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும் ஏனென்றால் பெல்ஜியத்தில் ஏலம் விடப்பட்ட அப்புறாவானது 1.25 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் 9.71 கோடிக்கு) ஏலம் போகியுள்ளது.

international

அர்மாண்டோ என்ற பெயரிடப்பட்ட இந்த புறாவின் ஸ்பெஷல் என்னவென்றால் உலகிலேயே அதிக தூரம் பறக்கக் கூடிய திறன் கொண்டது. மேலும், 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஏஸ் புறா சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2019ம் ஆண்டு புறாக்களுக்காக நடத்தப்பட்ட ஒலிம்பிக், அங்குலம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த புறாவை ஏலம் விட்ட நிறுவனம் இது குறித்து தெரிவிக்கும் போது "இந்த புறா இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போகும் என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. 4-5 லட்சம் அதிகபட்சம் 6 லட்சம் யூரோக்களுக்கு தான் ஏலம் போகும் என நினைத்தோம். இரண்டு சீனர் வந்து ஏலம் கேட்ட போது 5.35 லட்சம் யூரோவில் இருந்த விலை சுமார் 1 மணி நேரத்தில் 1.25 மில்லியன் யூரோ வரை பறந்தது. " என கூறியது.