அய்யோ பாக்கவே பயமா இருக்கு.. சாலைகளில் சுற்றும் ரத்தக்காட்டேரிகள், கொடூர ஆவிகள்..! தீயாய் பரவும் புகைப்படம்..!!



california zombie walk horror celebration

திருவிழாவில் ஜாம்பி, கொடூர ஆவிகள், ரத்தக்காட்டேரிகள் போல வேடமணிந்து மக்கள் நடமாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பொதுவாகவே மேலைநாடுகளில் வித்தியாசமான விழாக்களை கொண்டாடுவது வழக்கம். சமீபத்தில் கூட ஒரு நாட்டில் பீர்திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சிலி தலைநகர் சான்டியாகோவில் ஜாம்பி திருவிழா நடைபெற்றுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தை தன் வசப்படுத்தியுள்ளது. 

sili

அதில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர் என அனைவரும் கொடூர ஆவிகள், ரத்தகாட்டேரிகள், ஜாம்பி போல வேடமணிந்து சாலைகளில் நடந்து சென்றனர். இந்த ஜாம்பி வாக் நிகழ்வு கடந்த 2001-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தொடங்கியதை தொடர்ந்து, 21 ஆண்டுகளாக பாரம்பரியமாக பொதுமக்கள் மத்தியில் அரங்கேறி வருகிறது. 

sili

இவ்விழாவில் குடும்பமாக அனைவரும் பங்கேற்கின்றனர். இந்நிலையில் அவர்கள் ஜாம்பி வேடமிட்டு சாலையில் சென்ற பொதுமக்களை பயமுறுத்தும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்று கூறலாம்.