#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அமெரிக்கா தனது விண்வெளி நிலையத்தை மோத முயற்சிப்பதாக சீனா பரபரப்பு புகார்.!
அமெரிக்காவின் தொழிலதிபராக உள்ள எலான்மஸ்க், தனது நிறுவனமான Space X மூலமாக பல செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி வருகிறார். இது, இணையதள சேவை உட்பட பல சேவைக்காக பயன்பட்டு, புவிவட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க நிறுவனமான எலான்மஸ்க் செயற்கைகோள்கள், கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி, அக். 21 ஆம் தேதி தங்களது விண்வெளி நிலையம் அருகே 2 முறை மோதுவது போல வந்ததாக சீனா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா சபையிலும் புகார் அளித்து, அமெரிக்க நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.