#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அமெரிக்காவோட சேர்ந்து இதை எதிர்த்தால் அவ்வுளவுதான்., - சீனா பகிரங்க எச்சரிக்கை.!
அமெரிக்கா தங்களின் மீது வீண் பழியை சுமத்தி, ஒலிம்பிக் போட்டியில் அரசியல் செய்கிறது. ஒலிம்பிக் போட்டியை தவிர்க்கும் நாடுகள் பின்விளைவை சந்திக்க வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது.
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் வரும் பிப் 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டித்தொடர்கள் நடைபெறவுள்ளன. சீனாவில் சிறுபான்மையினராக கருதப்படும் உய்கூர் இன இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது.
இதனால் சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது உறுதியாகியுள்ள நிலையில், இதற்கு பல நாடுகளும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜ்ய ரீதியாக புறக்கணிக்கிறோம் என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் குளிர்கால ஒலிம்பிக்கு அரசு அதிகாரிகளை அனுப்பமாட்டோம். வீரர்களை மட்டுமே அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா தங்களின் மீது வீண் பழியை சுமத்தி, ஒலிம்பிக் போட்டியில் அரசியல் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ள சீனா, போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் மோசமான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் எச்சரித்து இருக்கிறது.