தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வலியே இல்லாமல் நிமிடத்தில் தற்கொலை செய்யணுமா?.. டாக்டர் டெத் தற்கொலை மெஷின் அறிமுகம்.!
எந்த வலியும் இல்லாமல் நொடியில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ள டாக்டர் டெத் இயந்திரம் 2022 ஆம் வருடம் சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உலகம் இயந்திரமயமாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு தேவைக்கும் மனிதன் இயந்திரத்தை தொடர்ந்து கண்டறிந்து வருகிறான். ஆனால், அவை அனைத்தும் செயற்கையே என்பதை கட்டாயம் நினைவில் கொள்வது நல்லது. வாழ்வதற்கு பல இயந்திரங்கள் நமக்கு உதவி செய்யும் வகையில் கண்டறியப்பட்டு வரும் சூழலில், வாழ்க்கையை நிமிடத்தில் முடித்துக்கொள்ளவும் இயந்திரத்தை கண்டறிந்துவிட்டார்கள்.
கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?.. ஆம்.. சுவிட்சர்லாந்து நாட்டில் வலியே இல்லாமல் தற்கொலை செய்வதற்கான நவீன இயந்திரம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்திற்கு அந்நாட்டு அரசும் ஒப்புதல் வழங்கி பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டினை பொறுத்த வரையில் கருணைக்கொலை என்பது சட்டபூர்வமானது ஆகும். அந்நாட்டில் கடந்த வருடம் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்பு மூலமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், "Doctor Death" என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலர், மருத்துவர் பிலிப் நீட்ச்க்கே (Philip Nitschke) வலியே இல்லாமல் மரணிக்கும் இயந்திரத்தை கண்டறிந்துள்ளார்.
சார்கோ கேப்சூல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இயந்திரத்தை தற்கொலை செய்ய விரும்பும் நபர் கூறும் இடத்திற்கு எடுத்து சென்று, அந்த நபரை இயந்திரத்தின் உள்ளே படுக்க வைத்து, அதில் இருக்கும் பொத்தானை அழுத்தியதும் நொடியில் உயிர் பிரிந்துவிடும் என்றும், இந்த இயந்திரம் வரும் வருடத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்படுகிறது.