வாட்ஸ் ஆப் பயனர்களே... வந்துவிட்டது சூப்பர் அப்டேட்.... Unknown கால்ஸ் பற்றிய கவலை இனி இல்லை.!



dont-worry-about-spam-calls-whatsapp-introducing-new-fe

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் செயலி என்பது அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று. குறுஞ்செய்திகள்,  ஆடியோ கால், வீடியோ கால் மற்றும் வாய்ஸ் மெசேஜ், பிடிஎஃப் டாக்குமெண்ட்கள் என அனைத்து விதமான தகவல் பரிமாற்றத்திற்கும்   இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

இத்தனை வசதிகள் இருந்தாலும் சில நேரங்களில் தேவையில்லாத எண்களில் இருந்து வரும் தொந்தரவான அழைப்புகள் அசவுகரியத்தை கொடுக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே வாட்ஸ்ஆப்  செயலியில் அதிக அளவிலான ஸ்பேம் கால்கள் என அழைக்கப்படும். தேவையில்லாத அழைப்புகள் அதிக அளவில் வருவதாக இந்திய பயனாளர்கள் வாட்ஸ்ஆப்  நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தனர்.

world

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கிறது வாட்ஸ்ஆப்  நிறுவனமான மெட்டா. இதன் சிஇஓ மார்க் சூக்கர்பெர்க்  இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். இந்த புதிய அறிவிப்பின்படி வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை நம்மால்  தவிர்த்துக் கொள்ள முடியும்.

இதற்காக வாட்ஸ்ஆப் செயலியின்  பிரைவசி செட்டிங்க்கு சென்று  கால்ஸ் ஆப்ஷனில்  சைலன்ஸ் அன்னோன் காலர்ஸ் என்பதை தெரிவு செய்வதன் மூலம் நமக்கு அறியாத  எண்களிலிருந்து வரும் அழைப்புகளை தவிர்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த எண்களை பற்றிய நோட்டிபிகேஷன் நமக்கு கொடுக்கும். வாட்ஸ்ஆப்  செயலியின் இந்த புதிய வசதி இந்திய பயனாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.