#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாலை நேரத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிட... சுவையான தக்காளி பஜ்ஜி! செய்வது ஈஸியோ ஈஸி...
மாலை நேரத்தில் அதுவும் இந்த குளிர் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மாலை நேர ஸ்னாக்ஸ் என்ன செய்வதன்று தெரியலையா. இதோ சுவையான தக்காளி பஜ்ஜி எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்...
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 2 வட்டமாக நறுக்கியது
2. கடலை மாவு - 3/4 கப்
3. அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
4. பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
5. மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
8. கேசரி பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, பேக்கிங் சோடா, கேசரி பவுடர், மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து மிதமான பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான தக்காளி பஜ்ஜி ரெடி.