கண்ணீருக்கு பதில் கற்களா? தினமும் வினோத நோயால் அவதிபடும் இளம்பெண்! இதுதான் காரணமா?
ஆர்மானியா நாட்டை சேர்ந்தவர் சாட்டானிக் கஷாயர். இவருக்கு அடிக்கடி கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் கண்களிலிருந்து சிறிய அளவில் கற்களும் வெளியே வந்துள்ளது.
இந்நிலையில் சாட்டனிக் கண்கள் கண்ணாடி போல இருந்துள்ளது. இந்நிலையில் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது கண்களுக்கு மருந்து ஊற்றி மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு போது கண்களில் கிரிஸ்டல் கற்கள் போன்று சிறிதளவு கற்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் அவரது கண்களில் இருந்த கற்களை நீக்கி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். ஆனால் வீட்டிற்கு திரும்பிய பின்பும் கண்களில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற அவர் கண்களில் பரிசோதனை மேற்கொண்டபோது அவரது கண்களில் 30க்கும் மேற்பட்ட கற்கள் இருந்துள்ளது
மேலும் அப்பொழுது மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போதுதான் கண்ணீர் துளிகளே கற்களாக மாறி வெளிவருவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது எதனால் ஏற்படும் நோய் என தெரியாமல் மருத்துவர்கள் தடுமாறி இருந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த கண் மருத்துவர் ஒருவர் நாட்டிற்கு சென்றுள்ளார்
அப்பொழுது அவரிடம் சாட்டானிக் பரிசோதனை மேற்கொண்ட போது புரதச்சத்து மற்றும் உடலில் உப்பு அதிகமாக இருப்பதால் இவ்வாறு கண்ணீர் துளிகள் கற்களாக மாறி வருவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும் கிட்னி மற்றும் கல்லீரல் உள்ளிட்ட சில பகுதிகளில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் அதனை சோதனை செய்து கண்டறிந்து சரி செய்துவிட்டால் இந்த பிரச்சினை சரியாகி விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் இந்த வினோத நோய் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.