பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குழந்தைகளின் பற்களை பிடுங்கி கொடூர கொலை செய்த ஹமாஸ் பயங்கரவாதிகள்; வெளியான பதைபதைப்பு உண்மை.!
அக். 07ம் தேதி இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் அறிவித்து, திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை முதலில் இஸ்ரேல் எதிர்பாரவில்லை எனினும், தற்போது ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியம் எளிதில் எழுச்சியடையாத அளவு பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
போரின் தொடக்கத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கொடூர கொலைகளை செய்தனர்.
இந்நிலையில், அவர்களால் பிணையக்கைதியாக பிடிக்கப்பட்ட குழந்தைகளின் பற்களை பிடுங்கி, தீயிட்டு எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சித்ரவதை கொலைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாதிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது.
முன்னதாக போரின் தொடக்கத்தில் இஸ்ரேலிய மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அவர்களின் தலையை வெட்டி துண்டித்து வைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.