#HBDJackie: 90 கிட்ஸ்-களின் பேவரட்.. உலகளவில் புகழ்பெற்ற நாயகன் ஜாக்கி சானுக்கு இன்று பிறந்தநாள்.!



Happy Birthday Jackie Chan

சீனா - ஹாங்காங் எல்லைப்பகுதியில் உள்ள ஹாங்காங்கில் கடந்த 1954 ஆம் வருடம், ஏழை குடும்பத்தில் பிறந்தவர் நடிகர் ஜாக்கி சான். இவர் சீனா - ஹாங்காங் இடையே நடந்த உள்நாட்டு போரின் போது, அகதியாக தனது தாய் - தந்தையாருடன் சீனாவுக்கு இடம்பெயர்ந்தார். இவர் சிறுவயதில் பெரும்பாலும் உருண்டுகொண்டே இருந்ததால், பெற்றோர் செல்லமாக Pao-pao (Cannonball) என்று அழைத்து வந்துள்ளனர். 

Happy Birthday

இவர் கடந்த 1960 ஆம் வருடம் சீன திரைத்துறையில் அறிமுகமாகி நடிக்க தொடங்கிய நிலையில், இன்று உலகளவில் புகழ்பெற்ற நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். சிறுவயதில் இருந்தே கடினமான உழைப்பாளியாகவும், சுறுசுறுப்பு மிகுந்த நபராகவும் வளர்ந்து வந்த ஜாக்கி சான், இன்றளவும் அப்படியே இருக்கிறார். இவரின் சண்டைக்காட்சிகள், தற்காப்பு கலைகளின் நுணுக்கங்கள் என்று ஒவ்வொன்றும் அவர் முறையாக கற்றுகொண்டவை.

Happy Birthday

சீன திரைப்படங்களில் மட்டுமல்லாது, உலகளவில் வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படங்களில் அமெரிக்க நடிகர்களுடனும் இணைந்து நடித்து இருக்கிறார். இவரை பெரும்பாலும் சிறுவயதுள்ள குழந்தைகள் ஜாக்கி சான் என்ற சித்திர படங்களில் மந்திரக்கல்லை தேடி பயணிக்கும் நபராக பார்த்து மகிழ்ந்திருப்போம். பலபெருமைகளை கொண்ட Chan Kong-sang என்ற ஜாக்கி சான், கடந்த 1954 ஆம் வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதி பிறந்தார். ஆம் இன்று அவருக்கு பிறந்தநாள். அவருக்கு தற்போது 68 வயது ஆகிறது.