#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.. சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்... பயணிகள் 25 பேர் பலியான சம்பவம்..!
தென் அமெரிக்க நாடான பெருவில் மலைப்பாதையில் சுற்றுலா சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 25 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெருவில் உள்ள பியூரா என்ற இடத்திலிருந்து 60 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்தானது அங்குள்ள மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து மலைப்பகுதியில் இருந்து விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சிலர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.