மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை கொடூரமாக கொன்று, மிருகத்தனமாக அந்த சடலத்தை வைத்து கணவன் செய்த காரியம்! நடுநடுங்கவைக்கும் சம்பவம்!
மெக்சிகோவை சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ. 46 வயது நிறைந்த அவர் கடுமையான போதையில் இருந்துள்ளார். அப்பொழுது அவருக்கும் அவரது மனைவி இங்க்ரிட் எஸ்கமில்லா என்பவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த எரிக், உடனே சமையல்அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தனது மனைவியின் கழுத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு அவரது தலையிலிருந்து கால் வரை தோலை உரித்து உடல் உறுப்புகளை வெட்டி அங்கிருந்த கால்வாயில் வீசி எறிந்துள்ளார்.
அதனை தொடர்ந்து கொலை செய்ததற்கான தடயத்தையெல்லாம் அழித்துவிட்டு, அவர் இதுகுறித்து தனது முன்னாள் மனைவிக்கு போன் செய்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே இந்த கொலை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு விரைந்து எஞ்சிக்கிடந்த உடல்பாகங்களை கைப்பற்றினர். பின்னர் எரிக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.