இளம்பெண்ணை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம்; இந்திய மாணவருக்கு இங்கிலாந்தில் சிறை; அதிர்ச்சி வீடியோ வெளியானது.!



In England Cardiff Indian Student Raped Young Girl Later Court Sent Prison life to Student 

 

போதையில் சாலையில் இருந்த பெண்ணை வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள கார்டிப் (Cardiff, United Kingdom) நகரில் உயர்கல்வி பயின்று வரும் இந்திய மாணவர் பிரீத் விகால் (வயது 20). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், சாலையில் போதையில் சுயநினைவு இன்றி இருந்த இளம்பெண்ணை தனது வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். 

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்ற, குற்றவாளியான இந்திய மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான புகார் குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. 

விசாரணையின் முடிவில் இந்திய மாணவர் பிரீத் விகாலுக்கு எதிராக சாட்சியங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட, அவருக்கு 6 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.