சமூக தொற்றானது குரங்கு அம்மை.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.!



monkeypox virus spread issue

அமெரிக்காவில் குரங்கு அம்மை காய்ச்சல் சமூக தொற்றாக மாறிவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவி மக்களை வீட்டிற்குள் முடக்கி வைத்தது. மேலும், பலரும் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து, கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரஸ் பரவல் ஏற்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை பொறுத்து அரசு மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கிறது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆப்ரிக்காவில் குரங்கு அம்மை காய்ச்சல் பரவி வருகிறது. அமெரிக்காவிலும் குரங்கு அம்மை வைரஸ் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் சமூக தொற்றாக மாறிவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

Monkeypox virus

இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் தெரிவிக்கையில், "குரங்கு அம்மை பரவலை தடுக்க நாம் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். மக்களுக்கு தடுப்பூசி, மருந்து விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும். மக்களுக்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வவேண்டும். மக்கள் அரசின் உத்தரவை பின்பற்றவும்" என்று தெரிவித்தார்.