பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அந்தரத்தில் தொங்கிய குட்டி குரங்கு..! அம்மா இருக்கேன் பயப்படாத..! நெஞ்சை உருக்கிய தாய்பாசம்..! வைரல் வீடியோ..!
இந்த உலகில் தாய் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கும் உண்டு என்பதை அவ்வப்போது நடைபெறும் சில காட்சிகள் நமக்கு புரியவைத்துவிடுகிறது. அதுபோன்ற சில காட்சிகளில் ஒன்றுதான் இது. வீட்டுச்சுவரின் அந்தரத்தில் தவித்துக்கொண்டிருந்த குட்டியை தாய் குரங்கு பாதுகாப்பாக மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குட்டி குரங்கு ஒன்று மிகவும் உயரமான வீட்டிச்சுவர் ஒன்றின் வழியாக மேலே ஏற முயல்கிறது. ஆனால் அந்த குட்டி குரங்கினாள் சுவற்றில் ஏற முடியாமல் பாதி வழியில் தவிக்கிறது. இதனிடையே சுவற்றில் உள்ள குழாய் ஒன்றை பிடித்தபடி அந்த குட்டி குரங்கு அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.
இதனை கவனித்துக்கொண்டிருந்த தாய் குரங்கு சட்டென தாவி, பாதி வழியில் தவித்துக்கொண்டிருந்த தனது குட்டியினை தூக்கி தனது நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அங்கிருந்து தாவி செல்கிறது. குட்டியை காப்பாற்றிய தாய் குரங்கின் பாசத்தை பலரும் பாராட்டியும், பகிர்ந்தும் வருகின்றனர்.