அதிசயம் ஆனால் உண்மை, ஒரு முதலையின் செயலை கண்டு வியக்கும் ரசிகர்கள் - வீடியோ இதோ!



muthalai jump in to the iron wall

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் ஜாக்ஸன்வில் பகுதியில் செயல்பட்டு வரும் கடற்படை பயிற்சி மையத்தில் நிகழ்ந்த அதிசயம். கடற்படை பயிற்சி மையத்தை சுற்றி இரும்பு வேலி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வேலியை அங்கு வந்த முதலை ஒன்று சர்வ சாதாரணமாக எகிறி குதித்து ஓடுகிறது.முதலை ஏறிக் குதிக்கும் காட்சியை அங்குவந்த கிறிஸ்டினா ஸ்டீவார்ட் என்பவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் வியந்து வருகின்றனர். மேலும் ஒரு முதலையால் எப்படி இது சாத்தியம் ஆகிறது எனவும் வியந்து அனைவருக்கும் ஷேர் செய்து வருகின்றனர்.