#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திக்..திக் நிமிடங்கள்... நிர்வாண பெண் துப்பாக்கிச் சூடு... பதற வைக்கும் வீடியோ.!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிர்வாண பெண் வாகனங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் பரபரப்பு மிக்க நெடுஞ்சாலையில் காரில் வந்த இளம் பெண் அங்கிருந்த டோல் பிளாசா அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய ஆடைகளை களைந்து நிர்வாணமாக நெடுஞ்சாலையில் துப்பாக்கியுடன் நடந்து வந்திருக்கிறார்.
திடீரென அவர் கையில் இருந்தது துப்பாக்கியை வைத்து அங்கு சென்ற வாகனங்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக நெடுஞ்சாலை பாதுகாப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
San Francisco seems lovely…#SanFrancisco #California pic.twitter.com/5lEzGEfVqI
— Mrgunsngear (@Mrgunsngear) July 26, 2023
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை காவல்துறையினரை கண்டதும் அந்த பெண் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். எனினும் அவரை துரத்திச் சென்று பிடித்த காவல்துறையினர் மனநிலை பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மனநல பரிசோதனை அறிக்கை வந்த பின் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.