#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சேவை என்ற சொல் ஜப்பானிலும் இந்தியாவிலும் ஒன்றுதான்; பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி உரை.!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு வாழும் இந்தியர்கள் இடையே உணர்ச்சிபூர்வமான நெகிழ்ச்சி உரையாற்றினார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் சின்சோ அபே உற்சாக வரவேற்பு அளித்தார். அதன்பிறகு இரண்டு நாடுகளும் இணைந்து நடத்தும் 13 ஆவது ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டார்.
பிறகு ஜப்பான் வாழ் இந்தியர்களிடையே உரையாற்றுவதற்காக தலைநகர் டோக்கியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது: தீபாவளி பண்டிகையின் போது தோன்றும் வெளிச்சம் போல, இந்தியர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள்.
வெளிநாடு வாழ் இந்தியர்களால், இந்தியாவுக்கு பெருமை சேர்ந்துள்ளது. தற்போது, இந்தியா டிஜிட்டல் கட்டமைப்பில், உலகளவில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல, மேக் இன் இந்தியா திட்டம் உலக அடையாளமாக மாறியுள்ளது. அந்த திட்டம் மூலம் உலக நாடுகளுக்கும் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்துக்களோ, புத்த மதத்தை சேர்ந்தவர்களோ நமது மூலம் ஒன்று தான். இந்துக்கடவுகள்களை ஜப்பானியர்கள் வணங்குகின்றனர். சேவை என்ற சொல் ஜப்பானிலும், இந்தியாவிலும் ஒன்று தான் என்று பிரதமர் மோடி பேசினார்.