ஏ தள்ளு தள்ளு தள்ளு.. விமானத்துக்கே இந்த நிலைமையா?.. வைரலாகும் வீடியோ.!



Nepal Flight Tire Blast Passengers and Security Officers Push and Settle Departure Point

கார், பேருந்து நடுவழியில் நின்று அதனை, வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகள் இறங்கி தள்ளி செல்வதை பார்த்திருப்போம். படங்களில் அதனை காட்சிகளாக வைத்து சிரித்திருப்போம். இந்நிலையில், விமானம் ஒன்று பயணிகளால் தள்ளி கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

நேபாள நாட்டில் உள்ள பாஜூரா நகரின் கோல்டி விமான நிலையத்தில், டாரா ஏர்லைன்ஸ் (Tara Air) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் நேரத்தில், ஓடுபாதையில் திடீரென பின்புற டயர் வெடித்து நடு ஓடுதளத்தில் நின்றுள்ளது. 

இதனால் விமானியும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி விழித்த நிலையில், விமான நிலையத்தில் மற்றொரு விமானமும் தரையிறங்க அனுமதி கிடைக்காமல் வானில் வட்டமடிக்க தொடங்கியது. 

இதனையடுத்து, பயணிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஓடுபாதையில் நின்று கொண்டு இருந்த விமானத்தை தள்ளிக்கொண்டு, விமானம் நிற்க வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்த்தனர். 

இந்த விஷயத்தை அங்கிருந்த நபரொருவர் அலைபேசியில் புகைப்படமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடவே, இந்த புகைப்படம் வைரலாகி கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.