சர்வாதிகாரம்: உறையவைக்கும் குளிரில் தந்தையின் பெருமை.. அதிகாரிகளுக்கு மறைமுக ஹீட்டர்.. வடகொரியாவின் பகீர் சம்பவம்.!



North Korea President Kim Jong Un Speech Freezing Cold with Peoples about II Kim Jong

வடகொரியா முன்னாள் அதிபரான இரண்டாம் கிம் ஜாங், கடந்த 2011 ஆம் வருடம் மறைந்தார். அவரின் மறைவுக்கு பின்னர், வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன், உலகளவில் பெரும் கொடூர மனம் கொண்ட சர்வாதிகாரியாக இருந்து வருகிறார். கொரோனா சூழலில் கூட மக்களின் உணவுக்கு வழிவகை செய்யாமல், அமெரிக்காவை எதிர்த்து அணுஆயுத சோதனையை நடத்தி உலக நாடுகளை வடகொரியா அரசு அதிர வைத்தது.

இந்த நிலையில், மறைந்த வடகொரிய தலைவர் இரண்டாம் கிம் ஜாங்கின் 80 ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் நிகழ்ச்சி, அங்குள்ள சம்ஜியோன் (Samjiyon City) நகரில் வைத்து நடைபெற்றது. தற்போது வடகொரியாவின் குளிர்காலம் என்பதால், கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மேலும், திரும்பும் திசையெல்லாம் அங்கு வெண்போர்வை போர்த்தினார் போல இருக்கும். 

Kim Jong Un

இப்படியான தருணத்தில், தந்தையின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்த கிம் ஜாங் உன், அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை கடும் குளிரில் அமரவைத்து தந்தை குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். உள்ளூர் செய்தி ஊடகங்களின் கூற்றுப்படி, இந்த நிகழ்வு கடந்த பிப். 15 ஆம் தேதி நடைபெற்றது என்றும், அப்போது நிகழ்விடத்தில் -15 டிகிரி குளிர் நிலவியது என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்குள்ள மக்கள், அதிகாரிகள் கைகளில் கிளவ்ஸ், உறைபனியில் இருந்து பாதுகாக்கும் உடைகளை போட்டுகொண்டு, உறையவைக்கும் கடும் குளிரில் 30 நிமிடங்களுக்கும் அதிகமான நேரத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். கிம் ஜான் உன் மற்றும் அவரின் தங்கை உட்பட அதிகாரிகள் குளிரில் இருந்து தப்பிக்கும் பொருட்டு ஹீட்டரையும் மறைமுகமாக பொருத்தி வைத்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.