பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா.. வேற லெவல்! தள்ளாடும் வயசுலயும் செம எனர்ஜியுடன் இளம்பெண்ணுடன் தாத்தா போட்ட ஆட்டம்!! வைரலாகும் வீடியோ!!
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வித்தியாசமான, வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை பெருமளவில் கவரும். அதிலும் குழந்தைகளின் சேட்டைகள், வயதான முதியவர்கள் குழந்தை போலச் செய்யும் சுட்டித்தனங்கள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பார்ப்போரை கவலை மறந்து சிரிக்க வைக்கும்.
இந்நிலையில் தற்போது வயதான முதியவர் ஒருவர் இளம்பெண்ணுடன் செம ஸ்டைலாக, எனர்ஜியுடன் சல்சா ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பார்ட்டியில் வயதான முதியவர் ஒருவர் இளம்பெண்ணுடன் இணைந்து சல்சா நடனம் ஆடியுள்ளார்.
தள்ளாடும் வயதிலும் அவர் இளம்பெண்ணுடன் அவரது வேகத்திற்கு ஈடு கொடுத்து சற்றும் சளைக்காமல் முழு எனர்ஜியுடன் ஆட்டம் போட்டுள்ளார். இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் கைதட்டி அவரை உற்சாகம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் உற்சாகமடைந்த அந்த முதியவர் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டும் நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.