குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
அபூர்வ நோயால் தீவிர சிகிச்சையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர்!
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் துபாயில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
முஷாரப் பாகிஸ்தானின்முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார்.
2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார். முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு லண்டனில் சிகிச்சை பெற்று வந்த முஷாரப்புக்கு ‘அமைலாடோசிஸ்’ என்ற அபூர்வ நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் மருத்துவ சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது. இந்த அபூர்வ நோயால் அவர் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். ‘அமைலோடோசிஸ்’ என்பது உடலில் உள்ள புரதம் உடைந்து பல்வேறு உறுப்புகளில் படிந்து விடுவதாகும். இதனால் அவரது எலும்புகள் பலவீனமடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து துபாயில் தனது வீட்டில் ஓய்வு பெற்று வந்தார் முஷாரப். இந்நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் துபாயில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.