பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாகிஸ்தானும், 7-ம் பொறுத்த பிரதமர் பதவியும்... லியாகத் அலிகான் முதல் இம்ரான் கான் வரை..! தொடரும் சாபம்.!!
இந்தியாவில் இருந்து பிரிந்து சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் நாடு, தனது வரலாற்றில் 22 பிரதமர்களை கண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் 5 வருட ஆட்சியை ஒருமுறை கூட நிறைவு செய்தது இல்லை.
கடந்த 1947 ஆம் வருடம் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து, அந்நாட்டின் பிரதமராக லியாகத் அலிகான் பதவியேற்றார். இவர் ராவல்பிண்டி என்ற பகுதியில் கடந்த 1951 ஆம் வருடம் அக். 16 ஆம் தேதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து அதிபர் பதவியேற்ற ஹுசைன் ஷஹீத் சுரதியும் 4 வருடம் 2 மாதத்தில் தனது பதவியை இழந்தார். பின்னர், கடந்த 1971 ஆம் வருடத்தில் பாகிஸ்தானின் 8 ஆவது பிரதமராக பதவியேற்ற நூருல் அமின் 13 நாட்கள் பதவியில் இருந்தார்.
பாகிஸ்தானின் வரலாற்றில் இவரே குறைந்த நாட்கள் பிரதமர் பொறுப்பில் இருந்தவர் ஆவார். கடந்த 1973-ல் பிரதமராக இருந்த ஜுல்பிகர் அலி பூட்டோ தனது 4 வருடங்களை நிறைவு செய்யும் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கையில், இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
அதனைத்தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு விடைகொடுத்து அரியணை ஏறிய பெனாசிர் பூட்டோ, நவாஸ் செரீப் போன்றோரும் 5 வருடத்தை நிறைவு செய்ததில்லை. கடந்த 2018 ஆம் வருடம் பிரதமராக ஆட்சிக்கு வந்த இம்ரான் காணும் 4 வருடத்திற்குள் (3 வருடம் 223 நாட்கள்) ஆட்சியை இழந்துள்ளார்.