#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாடியில் இருந்து குழந்தையை வீசி கொன்ற கொடூர பெற்றோருக்கு மரண தண்டனை விதிப்பு!
சீனாவில் குழந்தைகளை மாடியில் இருந்து வீசி கொடூரமாக கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சீனாவை சார்ந்த ஜாங் போ என்பவர் சென் மெய்லின் என்ற பெண்ணை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த தம்பதியினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வந்ததால், இருவரும் பிரிந்து வாழ்வது என முடிவெடுத்து பிரிந்து சென்றனர். இவர்கள் இருவரும் பிரிந்து நிலையில் குழந்தைகள் மட்டும் ஜாங் போவிடம் வளர்ந்து வந்துள்ளன.
இந்த நிலையில் ஜாங் போ ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், முன்னாள் மனைவியின் இரு குழந்தைகளும் தனது காதல் வாழ்க்கைக்கு தொல்லையாக இருப்பதாக அந்த பெண் அடிக்கடி கூறிவந்துள்ளார்.
இதனால் அந்த குழந்தைகளை கொலை செய்ய முடிவெடுத்த இருவரும், 15வது மாடியில் இருந்து குழந்தைகளை தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் விசாரணையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் விஷ ஊசி செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.