பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஏய்.. தள்ளு..தள்ளு..தள்ளு.! பஸ்,கார்,பைக்கை தள்ளி பார்த்திருப்போம்!!ஓடுபாதையில் விமானத்தை தள்ளிய பயணிகள்... வைரலாகும் வீடியோ.!
விமான ஓடுதளத்தில் டயர் வெடித்து பழுதாகி நின்ற விமானத்தை பயணிகள், விமான ஊழியர்கள் சேர்ந்து தள்ளிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேபாள நாட்டின் கோட்லி எனும் பகுதியில் அமைந்துள்ள பஜுரா விமான நிலையத்தில், தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று ஓடுபாதையில் தயாரான நிலையில் இருந்த போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் விமானமானது ஓடுபாதையிலிருந்து நகரமுடியாமல் இருந்துள்ளது.
இதற்கிடையே தரையிறக்க வந்த விமானம் ஒன்று ஓடுபாதையில் பழுதாகி கிடந்த விமானத்தால் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடிந்து கொண்டிருந்தது. அதனையடுத்து விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சேர்ந்து விமானத்தை மெதுவாக தள்ளி சென்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
सायद हाम्राे नेपालमा मात्र होला ! pic.twitter.com/fu5AXTCSsw
— Samrat (@PLA_samrat) December 1, 2021