#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிக்கிய 6 கள்ளக்காதல் ஜோடிகள்! வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனையால் சுருண்டு விழுந்து கதறி துடித்த பரிதாபம்.!
இந்தோனேசியா நாடுகளில் கள்ளக்காதல் மற்றும் ஓரினசேர்க்கை உறவு மிகவும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு வருகிறது.மேலும் அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொதுமக்கள் அனைவரின் முன்பும் சவுக்கடி தண்டனை வழங்கப்படும்.
மேலும் சூதாட்டம் மற்றும் மது அருந்துதல் போன்ற சம்பவத்தில் ஈடுபட்டாலும், அவை அவை பெரும் குற்றமாக கருதப்பட்டு அவர்களுக்கு சவுக்கடி தண்டனை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தோனேஷியா பண்டா ஏக் நகரில் உள்ள விடுதியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவர்கள் 6 கள்ளக்காதல் ஜோடிகளை கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் அந்த 6 கள்ளக்காதல் ஜோடியை கைதுசெய்தது. மேலும் அந்த 12 நபர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் நேற்று பொதுமக்கள் முன்னிலையில், சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும் அதில் 4 ஜோடிகளுக்கு 7 சவுக்கடியும், 2 ஜோடிகளுக்கு 17 சவுக்கடியும் வழங்கப்பட்டது. அப்பொழுது பெண்கள் வலி தாங்க முடியாமல் கதறி அழுது துடித்துள்ளனர். இதனை அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுளளனர்.