அப்டிப்போடு.. ஒயின் குடித்தால் கொரோனா பரவல் அபாயம் குறைகிறது.. ஆய்வில் ருசிகர தகவல்.!



Research Prove Wine Drinks Control Corona Spread

மதுபானம் அருந்தும் நபர்கள், "சரக்கு அடிப்பவர்களை கொரோனா என்ன எந்த நோயும் ஒன்றும் செய்யாது" என்று கூறுவார்கள். அந்த கூற்றும் சரிதானோ என்பதை உறுதி செய்யும் பொருட்டு சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

ஊட்டச்சத்து தொடர்பாக ஆய்வு நாளிதழில் வெளியான கட்டுரையில், "வாரம் 1 கோப்பை முதல் 4 கோப்பை வரை சிவப்பு ஒயின் அருந்தினால், கொரோனா பாதிப்பு அபாயம் 10 % குறையும். வாரத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பை சிவப்பு ஒயின் குடித்தால், கொரோனா அபாயம் 17 % குறைகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Wine Drinks

மேலும், கொரோனா தடுப்பு விவகாரத்தில் வெள்ளை நிற ஒயின் மற்றும் சாம்பைன் போன்றவையும் நல்ல பலனை அளிக்கிறது. ஆனால், இவை இரண்டையும் விட மேலானதாக சிவப்பு ஒயின் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒயினுக்கு ஓகே, பிற மதுபானங்கள் எப்படி என்று கேட்டால், அங்கு தான் ஆப்பும் வைக்கப்படுகிறது. 

பீர் போன்ற மதுவகைகளை குடித்தால் கொரோனா தொற்று அபாயம் 7 மடங்கு அதிகரிக்கிறது என்றும், ஆல்கஹால் பணத்தால் தீமை தான் அதிகம் என்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். எது எப்படியானாலும் கிருமி நாசினியிலும் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் உள்ளதே என்று கேட்டால், அதனை நோய்ப்பரவளை தடுக்க பயன்படுத்தினால் நல்லது. குடித்தால் உயிர் சேதம் தான்.