#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
12 இடங்களில் பெண்ணை சரமாரியாக குத்தி கொலை செய்த முன்னாள் இராணுவ வீரர்.. பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம்.!
பாலியல் கலவிக்கான பொம்மைகள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வரும் பெண்மணி, முன்னாள் இராணுவ வீரரால் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வருபவர் ஓல்கா பிளாவட்ஸ்கயா (Olga Blavatskaya) 36 வயது. இவர் உள்ளூரில் இருக்கும் பாலியல் பொம்மைகள் விற்பனை செய்யும் கடையில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று வழக்கம்போல பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, வாடிக்கையாளர் போல ரஷியாவின் இரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றிய கிரில் வாசிலியேவ் (Kirill Vasilyev) என்ற 30 வயது நபர் கடைக்கு வந்துள்ளார்.
அவர் செயற்கையான யோனி அமைப்பு கொண்ட பொம்மைகளை பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், திடீரென 2 பொம்மைகளை களவாடி செல்ல முயற்சித்துள்ளார். இதனைகவனித்த பணியாளர் ஓல்கா, கிரில்லை தடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, அவரிடம் இருந்து தப்பி செல்லும் பொருட்டு, ஓல்காவை தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றார். பலியான ஓல்காவின் உடலில் 12 வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, கடையில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்து கிரில்லை கைது செய்தனர். மேலும், அவர் திருடி சென்ற பாலியல் பொம்மைகளும் அவரின் அறையில் இருந்து மீட்டனர். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கிரில்லுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த வருடம் விவாகரத்து பெற்றுள்ளார்.