பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#BigNews: உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷியா.. பதில் தாக்குதலில் உக்ரைன்.!
உக்ரைன் நாட்டை சோவியத் யூனியனுடன் இணைக்க இறுதிக்கட்ட முயற்சியாக படையெடுப்பை கையில் எடுத்துள்ள ரஷியா, உக்ரைன் நாட்டின் மீது போர்தொடுத்துள்ளது. உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி ரஷியா தனது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உக்ரைன் இராணுவமும், அந்நாட்டு மக்களும் போர்களில் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் நாட்டின் நகரங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. மேலும், இருதரப்பிலும் தொடர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஷிய துருப்புகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக கருதப்படும் கார்கிவ் (Kharkiv) நகரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அந்நகர நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரஷியா - உக்ரைன் துருப்புகள் இடையே சண்டை நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.