#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"பயத்த காட்டிட்டியே பரமா..." விமானம் புறப்படுவதற்கு முன் விமானி செய்த செயல்... அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்.!
விமானம் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மது போதையிலிருந்த விமானி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருக்கும் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. டெல்டா ஏர்வேஸ் விமான நிறுவனத்தைச் சார்ந்த போயிங் 767 ரக விமானம்.
அந்த விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் விமானியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீசார் அவரிடம் சோதனை நடத்திய போது ரெயில்வே மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு சட்டம் 2003ன் கீழ் அமைக்கப்பட்ட சட்ட வரம்பு 0.02க்கு மேல் அவரது இரத்தத்தில் ஆல்கஹால் அளவு கண்டறியப்பட்டதை அடுத்து விமானி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லயிருந்த பயணிகளிடம் டெல்டா ஏர்வேஸ் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது. மேலும் அவர்களுக்கான மாற்று ஏற்பாடு குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் குறித்த நேரத்தில் விமானி கைது செய்யப்பட்டு இருப்பது அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.