#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு.. போதை ஆசாமிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம்..!
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் போதை ஆசாமிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாத குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் துலாரே நகரில் மர்ம நபர்கள் ஒரு வீட்டை குறி வைத்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலானது அதிகாலை 3 மணி அளவில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் தலையில் குண்டு பாய்ந்து 6 மாத குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
மேலும் துப்பாக்கி சூடு நடந்த வீட்டில் கடந்த வாரம் போதைப்பொருள் தொடர்பாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் தான் இந்த கொடூர தாக்குதலை நடத்தி இருக்ககூடும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.