#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆஹா, இனி காலிங்பெல் அடிக்கிறதுக்கு முன்னாடி உஷாரா இருக்கணுமோ! வைரலாகும் நடுநடுங்க வைக்கும் வீடியோ!!
அமெரிக்காவில் நபர் ஒருவர் தன் நண்பனை காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது வீட்டின் வெளியே காரை விட்டு, இறங்கிய அவர் வீட்டு வாசல் அருகே சென்று வேகமாக காலிங் பெல் அடித்துள்ளார்.
அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று ஆக்ரோசத்துடன் மிக வேகமாக அவரை தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பயத்தில் துடிதுடித்து அலறியவாறே தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறிக்கொண்டே வீட்டிற்குள் செல்கிறார்.
இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகிஇருந்த நிலையில், ஆடு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமாக உள்ளதாகவும், காலிங் பெல் அருகே இருந்த பாம்பு அடித்து கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.