178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசையில் தோன்றும் சூரிய கிரகணம்.. இந்தியாவில் காண முடியாதது ஏன்..?



solar-eclipse-appearing-after-178-years-on-mahalaya-ama

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் உண்டாகிறது. மேலும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் தோன்றுகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான கடைசி சூரிய கிரகணம் இன்று இரவு 8:34 மணிக்கு தொடங்க இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. மேலும் இந்திய நேரப்படி இரவு 8:34 மணி முதல் நள்ளிரவு 2:25 மணி வரை கிரகணம் நிகழ இருப்பதால் இதனை இந்தியாவில் காண முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Solar eclipse

இந்நிலையில் இந்த கிரகணத்தை அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, மத்திய அமெரிக்காவின் பல இடங்களில் நெருப்பு வளையமாக காண முடியும் என்ற
 தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.