#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காது வலியால் அவதிப்பட்ட இளைஞன்.! பரிசோதனையில் காதுக்குள் இருப்பதை கண்டு ஆடிப்போன மருத்துவர்கள்!!
சீனாவின் ஜியான்சூ மாகாணத்தை சேர்ந்தவர் லி. இவருக்கு சமீபகாலமாகவே காதில் எரிச்சல் மற்றும் அரிப்பும் இருந்துள்ளது. மேலும் அவ்வப்போது கடுமையான காதுவலியும் இருந்துள்ளது.
காது வலியால் ஒரு வேலையும் செய்யாமல் பெருமளவில் கஷ்டப்பட்டுவந்த லி சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு லியின் காதில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் காதில் எதுவும் இல்லை என்று கூறி அனுப்பியுள்ளனர்.
ஆனால் காதுவலியும், அரிப்பும் நிற்காமல் இருந்த நிலையில் காதுக்குள் ஏதோ ஊர்வது போலவும் உணர்ந்த அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அங்கு மருத்துவர் மைக்ரோஸ்கோப் மூலம் அவரது காதுக்குள் ஆழமாக சோதனை செய்தனர். அப்போது லியின் காதில் சிலந்தி ஒன்று வலைபின்னி இருந்துள்ளது.மேலும் காதுக்குள் உயிருடன் ஊர்ந்து கொண்டிருந்துள்ளது.
ஆணை தொடர்ந்து மருத்துவர்கள் எளிய முறையாக உப்பு கலந்த நீரை லி-யின் காதுக்குள் ஊற்றியுள்ளனர். இதில் சிலந்தி வெளியே வந்துள்ளது. இந்நிலையில் லியின் காதின் உள்ளே மைக்ரோஸ்கோப் மூலம் பரிசோதனை செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.