#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு... மனதை நொறுங்க செய்யும் திக் திக் நிமிடங்கள்..!
அமெரிக்காவில் கொலோரடோ பகுதியில் இரவு விடுதியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இரவு விடுதியில் ரைபிள் இயந்திர துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் விடுதியில் இருந்தவர்களை பார்த்து சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளார்.
இதனால் பயந்து போன விடுதியில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓட தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் கைதான நபர் 22 வயதான ஆண்டர்சன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் 18 பேர் படுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.