நடுக்கடலில் மூழ்கிய தாய்லாந்து கப்பல்... மாயமான 31 கடற்படையினர்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!



The Thai ship sunk in the middle of the sea... 31 mysterious sailors... Heartbreaking scenes..!

தாய்லாந்து கடற்படையின் போர்க்கப்பல் நேற்று இயந்திர கோளாறு காரணமாக வளைகுடா பகுதியில் கப்பல் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் போர்க்கப்பலில் இருந்த 106 பேரில் 75 பேரை மீட்பு குழுவினர் மீட்டு உள்ளனர்.

மேலும் கடற்படையினர் 31 பேரை காணவில்லை எனவும், அவர்களைத் தேடும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் காற்றின் வேகத்தால் கடலில் அலைகள் உயரமாகவும், அதிகமாகவும் அடிப்பதால் காணாமல் போனவர்களை தேடும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. 

Thai ship sunk

மேலும் ஹெலிகாப்டரின் உதவியுடன் 16 கிலோமீட்டர் சுற்றளவில் தொடர்ந்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கப்பல் நீரில் மூழ்கியதற்கு முறையான விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.