#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொழுதை கழிக்க சென்ற சுற்றுலா பயணிகள்... பனி சரிவில் சிக்கி மாயமான சம்பவம்... ஆஸ்திரியாவில் பரபரப்பு..!
மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பணி சரிவில் சுற்றுலாப் பயணிகள் சிக்கி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் ஸ்கை ரிசாட்டில் கூடி பணிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பணிச்சரிவு ஏற்பட்டது. இந்த பணி சரிவில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த மீட்பு குழுவினர் ஒருவரை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் எஞ்சியூரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன.