பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மாற்றுத்திறனாளியை அடித்துக் கொலை செய்த 3 சிறுமிகள்; கொண்டாட்ட மனநிலையில் பயங்கர செயல்.!
அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் பகுதியை சேர்ந்தவர் ரெஜிஜி பிரௌன் (வயது 64). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். சம்பவத்தன்று இவரின் வீட்டில் இருந்து 2 சிறுமிகள் மர்மமான வகையில் தப்பி சென்றனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்தபோது, பிரவுன் அவரின் வீட்டில் அடித்து கொல்லப்பட்டு இருந்தார்.
மேலும், 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுமிகளால் அவர் அடித்து கொலை செய்யப்பட்ட கேமிரா காட்சிகளும் பதிவானது. விசாரணையில், கொண்டாட்ட மனநிலையில் இருந்த சிறுமிகள் அவரை கொன்றது தெரியவந்தது.
நிகழ்விடத்தில் ஒரு சிறுமி காலில் துப்பாக்கி குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அவரிடம் நடந்த விசாரணையின் பேரில் காவல் துறையினர் முதியவரை கொலை செய்ததாக மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.