#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு விஸ்கி பாட்டிலின் விலை(8 கோடி) உலக சாதனை; ஆச்சரியமான நிகழ்வு எங்க நடந்துச்சுனு தெரியுமா?
இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.8 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது உலகிலேயே மிகவும் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று.
ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் வித்தியாசமாக அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ள ஒரு ஏலம் நடத்தப்பட்டது. அதாவது 1926 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1986ஆம் ஆண்டு பாட்டிலில் நிரப்பப்பட்ட உலகிலேயே மிகவும் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று ஏலம் விடப்பட்டது.
அதாவது அறுபது ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த விஸ்கி மதுபான பாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூபாய் 8 கோடிக்கு விற்கப்பட்டது. இது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட விஸ்கி என்ற சாதனையையும் படைத்தது.
மக்கல்லன் வலேரியோ அதாமி என்ற பெயர் கொண்ட இந்த விஸ்கியை ஹோலி கிரெயில் என்று குறிப்பிடுகிறார்கள்.