#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீராத தலைவலி..! சிவப்பு நிறத்தில் மூளையில் காத்திருந்த பேராபத்து..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
அமெரிக்கா டெக்ஸாசில் வசித்து வந்தவர் ஜெரார்டோ. இவருக்கு நீண்ட காலமாக கடுமையான தலைவலி இருந்து வந்துள்ளது. மேலும் அதுமட்டுமின்றி தலைவலியால் அவருக்கு சில சமயங்களில் வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு கால்பந்து விளையாடும் போது மைதானத்தில் மயங்கி விழுந்த அவருக்கு தொடர்ந்து அண்மையில் வரை கடுமையான தலைவலி இருந்துவந்துள்ளது. அதனை தொடர்ந்து ஜெரார்டோ சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது நான்கு சென்டிமீட்டர் நீளத்தில் சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்று தெரிந்துள்ளது. அதை நாடாப்புழுக்களாக இருக்கலாம் என்று எண்ணிய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூளைக்குள் கூடு போன்ற அமைப்பிற்கு இருந்த நாடா புழுவை அகற்றினர்.
அதனைத் தொடர்ந்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விரைவில் குணமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த நாடாப்புழுக்கள் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இத்தகைய நாடாப்புழுக்கள் பன்றி இறைச்சியை சரியாக வேக வைக்காமல் சாப்பிடும் போது மனிதனின் உடலுக்குள் நுழைகிறது. மேலும் இவை மூளை வரை செல்லும் அபாயமும் உள்ளது என தெரிவித்துள்ளனர்.