மக்களே உஷார்!. கடும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!.



Warning for tsunami

இன்று இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 6 ரிக்டருக்கு  அதிகமாக ஏற்பட்டாலே அது அபாயகரமானது.

இந்த நிலையில் இன்று இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில் அந்த நாட்டு பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேரி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவிக்கபட்டுள்ளது.

இதேபோல் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் மொத்தம் 12 நாடுகளில் 2 லட்சத்திற்கு  மேலானோர் உயிரிழந்தனர். 

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்  எந்தெந்த நாடுகளை தாக்கும்  என்று இன்னும் விரிவாக அறிக்கை வெளியிடவில்லை. இதற்கு முன் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி தமிழகம், அந்தமான், இலங்கையை கொடூரமாக தாக்கியது என்பது அனைவரும் தெரிந்த ஒன்றாகும்.