#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாட்ஸப்பில் தப்பா மெசேஜ் அனுப்பிட்டு தவிக்கிறீங்களா?.. இனி நீங்களே திருத்தம் செய்யலாம்..!! வருகிறது வாட்ஸப்பின் புதிய அப்டேட்..!!
மெட்டா நிறுவனத்தின் அங்கமாகிபோன வாட்ஸ் அப் தொடர்ந்து தன்னை புதுப்பித்து பயனாளர்களுக்கு பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினால் அதனை மீண்டும் திருத்தம் செய்ய வசதிகள் கிடையாது.
தவறாக மெசேஜ் அனுப்பி விட்டால் அதனை டெலிட் செய்ய வேண்டும். இந்நிலையில் பயனர்கள் தங்களது மெசேஜை திருத்தம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட் கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களில் அதனை எடிட் செய்தால் எடிட் ஆகிவிடும் என்ற வசதி விரைவில் படிப்படியாக கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.