பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்.! உலக சாதனை படைத்த பெண்.!
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல். 37 வயது நிரம்பிய இவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனையடுத்து பிரசவத்திற்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசேரியன் மூலம் இவர் குழந்தைகளை பெற்றுள்ளார். இவருக்கு 10 குழந்தைகள் பிறந்துள்ளது. ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளது.
Exclusive: Mother of 10 babies who broke Guinness World Record appeals for help https://t.co/2SiiDgI4ej
— Mr Putin (@pietrampedi) June 9, 2021
இது குறித்து சித்தோல் கூறுகையில், தனது கர்ப்பம் இயற்கையானது என்றும், தான் கருவுறுதல் சிகிச்சை மூலம் குழந்தை பெறவில்லை என்றும் கூறி உள்ளார். இந்தநிலையில், சித்தோல் பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.